சுபிக்ஷாவிற்கு கை கொடுப்பாரா சூரகன்
ADDED : 1189 days ago
கடுகு, கோலிசோடா 2, நேத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறவர். தற்போது யார் இவர்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வரும் சுபிக்ஷா, ‛சூரகன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தேர்ட் ஐ நிறுவனத்தின் சார்பாக கார்த்திகேயன் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் இயக்குகிறார். பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார், அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் படம். சுபிக்ஷாவுக்கு சூரகன் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.