ஹீரோயின் ஆனார் அஜித் மகள்
ADDED : 1189 days ago
என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அதன் பிறகு ‛விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தற்போது 'ஓ மை டார்லிங்' என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
அறிமுக நாயகன் ஆல்பிரட் டி சாமுவேல் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர முகேஷ், லீனா, விஜயராகவன், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நந்து ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். அன்சார் ஷா, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கொச்சியில் நேற்று தொடங்கியது.