'ஜெயிலர்' புதிய போஸ்டர் வெளியீடு
ADDED : 1167 days ago
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி , யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் தோற்றம் அடங்கிய ஒரு மாஸான போஸ்டரை படக் குழு இன்று வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினி சற்று வயதான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.