மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1114 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1114 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1114 days ago
கடந்த வருட இறுதியில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் குரூப் என்கிற திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மானை முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். கேரளாவில் எண்பதுகளில் வாழ்ந்த, இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆசைப்பட்டு தான் இறந்து போனதாக சித்தரிப்பதற்காக, வேறு ஒரு நபரை கொலை செய்த குற்றவாளியான சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஓய்ந்த சமயத்தில் இந்த படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்போதே ஐம்பது கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது இந்த படம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து மொழி ஓடிடி வெளியிட்டு உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து படத்தின் வசூல் மற்றும் ஓடிடி உரிமைத்தொகை எல்லாம் சேர்த்து குரூப் திரைப்படம் 118 கோடி மொத்தமாக வசூலித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள துல்கர் சல்மான், இதற்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
1114 days ago
1114 days ago
1114 days ago