பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
ADDED : 1239 days ago
நடிகர் மற்றும் இயக்குனரான பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்றுத் தந்தது. மேலும் ஒரு சில படங்களிலும் பாரதிராஜா தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பாரதிராஜாவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பாரதிராஜாவை சில நாட்கள் வரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தெரிகிறது.