'குருதி ஆட்டம்' - மன்னிப்பு கேட்ட இயக்குனர்
ADDED : 1237 days ago
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‛குருதி ஆட்டம்'. அதர்வா, பிரியா பவானி சங்கர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக ஸ்ரீகணேஷின் முந்தைய படமான 8 தோட்டாக்கள் அளவுக்கு இல்லை என பலரும் கூறினர்.
இந்நிலையில் ஸ்ரீகணேஷ் வெளியிட்ட ஒரு பதிவில், ‛‛குருதி ஆட்டம் ரிலீஸின் போது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இதை சொல்ல வார்த்தையில்லை. இந்த படத்தில் உள்ள குறைகளுக்கு மன்னியுங்கள். இன்னும் கடினமாக உழைத்து எனது அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுப்பேன். இந்த படத்தை தியேட்டர்களில் மிஸ் செய்தவர்களுக்காக செப்., 2 முதல் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது'' என தெரிவித்துள்ளார்.