உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர்-ல் சிறிய வேடத்தில் நடிக்கும் தமன்னா

ஜெயிலர்-ல் சிறிய வேடத்தில் நடிக்கும் தமன்னா

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமன்னாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடிதான் என்றாலும் முழு நீள வேடமாக இல்லாமல், சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் ஒரு சிறிய வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறாராம். அதாவது பேட்டை படத்தில் எப்படி திரிஷாவுக்கு சிறிய வேடமோ அதே போன்றுதான் இந்த படத்தில் தமன்னாவுக்கும் சிறிய வேடம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !