சிங்கிள் ஷாட் படத்தில் கிரிஷா க்ரூப்
ADDED : 1162 days ago
அழகுகுட்டி செல்லம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரிஷா க்ரூப், அதன்பிறகு கூட்டாளி, கோலிசோடா 2, சாலை, ஏஞ்சலினா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது யுத்த காண்டம் என்கிற சிங்கிள் ஷாட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி உள்பட பலர் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பல விருதுகளை பெற்றுள்ள இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் இது.