பான் இந்தியா படத்தில் சித்தார்த்
ADDED : 1221 days ago
பெல்லி சூப்லு, ஈ நாகாராணி ஏ தமயந்தி என இரு வெற்றிப் படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கும் அடுத்த படம் கீடா கோலா. இது கிரைம் காமெடி படமாக உருவாகிறது. விஜி சைன்மா நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் துவக்க விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இது பான் இந்தியா படமாக உருவாகிறது என்றும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சித்தார்த் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.