பெப்சி பொறுப்பாளர்களுக்கு விருந்து அளித்த இளையராஜா
ADDED : 1137 days ago
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். பார்லிமென்ட்டில் எம்பியாக பதவியும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் எம்பியாக தேர்வானதிற்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கும் விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார் இளையராஜா. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த இரவு விருந்தில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு, மனோபாலா உள்ளிட்ட 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.