4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‛அவதார்'
ADDED : 1137 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் ‛அவதார்'. பாக்ஸ் ஆபிசில் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன. இரண்டாம் பாகமான ‛அவதார்: தி வே ஆப் வாட்டர்' படம் டிசம்பரில் வெளியாகிறது. முதல்பாகத்தில் நடித்தவர்களுடன் ஜேம்ஸ் கேமரூனே இந்த படத்தையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே அவதார் படத்தின் முதல்பாகம் மீண்டும் வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி அவதார் முதல்பாகம் தற்போது 4 கே தொழில்நுட்பத்தில் மெரூகேற்றப்பட்டு செப்., 23ம் தேதி மீண்டும் உலகம் முழுக்க வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.