உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயம் ரவியின் 30வது படத்தில் இணைந்த பூமிகா

ஜெயம் ரவியின் 30வது படத்தில் இணைந்த பூமிகா

விஜய்யுடன் பத்ரி என்ற படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்த பூமிகா, தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூமிகா, அதன்பிறகு தெலுங்கில் அவ்வப்போது நடித்தவர் தமிழில் பல வருடங்களுக்கு பிறகு சமந்தா நடித்த யுடர்ன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான சீதாராமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பூமிகா, தற்போது தமிழில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தில் அவரது சகோதரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !