மீண்டும் படம் இயக்கும் கவுதமன்
ADDED : 1134 days ago
சின்னத்திரையில் ஒளிபரப்பான சந்தனகாடு தொடரை இயக்கிய வ.கவுதமன் அதன்பிறகு மகிழ்சி, கனவே கலையாதே படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தற்போது படம் இயக்க வந்திருக்கிறார். படத்திற்கு மாவீரா என்று டைட்டில் வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கவுதமன் கூறியதாவது: தமிழர்களின் தொண்மை மிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் இந்த படம் இருக்கும். முந்திரிக்காடு வன்னிகாடு பின்னணியில் இந்த படம் உருவாகிறது. நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்கிறார் கவுதமன்.