சூர்யா 42 : நடிகர்கள் பட்டியல் வெளியானது
ADDED : 1181 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சூர்யா 42 வது படத்தில் ஆனந்தராஜ், கோவை சரளா , யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிப்பதாக முதல் கட்டமாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படி ஒரு காமெடி டீம் சூர்யா படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தில் காமெடி காட்சிகளும் அதிகமாக இடம்பெறும் என்பது தெரியவந்துள்ளது. மற்ற நடிகர்கள் நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.