திருச்சிற்றம்பலம் வெற்றி : சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்
ADDED : 1158 days ago
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து முதல் நாளிலிருந்தே திருப்திகரமான வசூலை கொடுத்து வருகிறது. அந்த வகையில் திருச்சிற்றம்பலம் திரைக்கு வந்து எட்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் உட்பட திருச்சிற்றம்பலம் பட குழுவினர் கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.