சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் மகன்
ADDED : 1183 days ago
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் அந்தப் படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி சசிகுமார் எடுக்கப்போகும் வெப் தொடரில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில், சசிகுமார் - சண்முக பாண்டியன் கூட்டணியில் உருவாகப்போவது படமா அல்லது வெப் தொடரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.