கன்னட படத்தில் அறிமுகமாகும் விக்ரம்
ADDED : 1179 days ago
நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா திரைப்படம் நாளை ஆக., 10ம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்., 30ம் தேதியும் வெளியாக இருக்கிறது.
தற்போது விக்ரம் கோப்ரா படத்திற்காக பல மொழிகளில் தீவிரமாக புரொமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பவன் குமார் கன்னடத்தில் யூ-டர்ன் மற்றும் லூசியா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிப்பில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் மூலம் விக்ரம் கன்னடத்தில் அறிமுகமாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.