உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

தற்போது ராஜேஷ்.எம் இயக்கி வரும் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சைரன் என்ற படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. ஹோம் மூவி மேக்கர் தயாரிக்கும் இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது சாலை விபத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாக இருப்பது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !