விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த நந்தினி ராய்!
ADDED : 1230 days ago
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷியாம், குஷ்பு என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் தற்போது நந்தினி ராய் என்ற தெலுங்கு நடிகையும் இப்படத்தில் முக்கிய வேடத்திற்காக கமிட்டாகி இருக்கிறார்.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பரவலாக நடித்துள்ள நந்தினி ராய்க்கு வாரிசு படத்தில் செகண்ட் ஹீரோயினி வேடம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த மாதத்தோடு வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.