‛கிக்' கொடுக்கும் சந்தானம்
ADDED : 1133 days ago
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் குலு குலு படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தை அடுத்து சந்தானம் ‛கிக்' என்ற படத்தில் நடிக்கிறார். இதை கன்னடத்தில் ‛லவ் குரு, விசில், ஜூம்' போன்ற உள்ளிட்ட படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். நாயகியாக தன்யா ஹோப் நடிக்கிறார். காமெடி கலந்த பேன்டசி படமாக உருவாகும் என தெரிகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.