உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விநாயகர் சதுர்த்தி புதுவரவாக அமர்க்களப்படுத்தும் புஷ்பா விநாயகர்

விநாயகர் சதுர்த்தி புதுவரவாக அமர்க்களப்படுத்தும் புஷ்பா விநாயகர்

ஒவ்வொரு காலகட்டம் மாறமாற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் விநாயகரின் உருவங்களும் கூட காலத்திற்கு ஏற்ப மக்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில் லேட்டஸ்ட் வரவான புஷ்பா விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படம் தமிழ், மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களையும் ரொம்பவே கவர்ந்தது குறிப்பாக அல்லு அர்ஜுனின் வசனங்களும் மேனரிசங்களும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் முதற்கொண்டு நியூயார்க் மேயர் வரை அனைத்து தரப்பினரையும் சென்று அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பராஜ் கதாபாத்திர ஸ்டைலில் வெள்ளை உடை அணிந்த விநாயகர், தன் தாடையின் கீழே அல்லு அர்ஜுன் கைகளை வைத்து தேய்ப்பது போன்ற உருவத்தில் உருவாகியுள்ளது. மேலும் அந்த படம் செம்மர கடத்தல் பின்னணியில் உருவாகியிருப்பதால் விநாயகரும் ஒரு செம்மரக்கட்டை மீது அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல புஷ்பா ஸ்டைலில் லுங்கி அணிந்த விநாயகர் சிலையும் கூட விற்பனைக்கு வந்துள்ளது. அந்தவகையில் இந்த புஷ்பா பிள்ளையார் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !