ஜெயம் ரவியின் அகிலன் படமும் உதயநிதி வசமாகிறது
ADDED : 1212 days ago
பூலோகம் படத்தை தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் அகிலன். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அகிலன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தில் அருள் நிதியின் டைரி படத்தை வெளியிட்ட அந்நிறுவனம், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவியின் அகிலன் படத்தை நவம்பர் 11ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.