தேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய திருமணமா? - நடிகை மறுப்பு
ADDED : 1211 days ago
தமிழ், தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். இவர் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரவி வந்தது. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் பூஜிதா பொன்னாடா.
இது குறித்து பூஜிதா கூறுகையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார் .
இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது .