திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்
ADDED : 1147 days ago
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 100 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தந்த வெற்றியால் தனுஷ் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளாராம். சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .