ஓடிடி.,யில் வெளியாகும் கார்த்தியின் விருமன் படம்: எப்போது தெரியுமா?
ADDED : 1235 days ago
சூர்யா தயாரித்து கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'விருமன்'. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். கிராமத்து கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 11ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.