மகளை தொழில் அதிபர் ஆக்கும் அர்ஜூன்
ADDED : 1204 days ago
நடிகர் அர்ஜூனுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர் ஐஸ்வர்யா தற்போது படங்களில் நடித்து வருகிறார். இரண்டாவது மகள் அஞ்சனா. இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கனவே அர்ஜூன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஞ்சனா பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.
இதனை விற்பனை செய்ய சார்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார். சார்ஜா என்பது அர்ஜூன் குடும்பத்தின் பெயராகும். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குனர் விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். இதனை பெரிய அளவில் கொண்டு சென்று மகளை தொழில் அதிபராக்க முடிவு செய்திருக்கிறார், அர்ஜூன்.