சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு டைட்டில் வெளியானது!
ADDED : 1229 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. அவருடன் சித்தி இதானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மகாதேவன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியான நிலையில் வருகிற 15ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தை தயாரித்துள்ள வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், வெந்து தணிந்தது காடு படம் தெலுங்கில், ‛தி லைப் ஆப் முத்து' என்ற பெயரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஷ்ராவந்த் மூவிஸ் என்ற நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.