மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1163 days ago
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சேலம் பகுதியில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். வருகிற திங்கள் கிழமை முதல், பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடங்குகின்றன. தீபாவளி வெளியீடாக படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.