ராம் பொத்தினேனியை இயக்கும் கவுதம் மேனன்
ADDED : 1167 days ago
தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி சமீபத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ‛தி வாரியர்' என்ற படத்தில் நடித்தார். இந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க உள்ள ராம், இதை முடித்ததும் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்குகிறார்கள். இந்த படத்தை உறுதி செய்துள்ள கவுதம் மேனன், ‛‛வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாக இது இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள கேங்ஸ்டர் படமான வெந்து தணிந்தது காடு படத்தை தெலுங்கில் தி லைப் ஆப் முத்து என்ற பெயரில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தான் வெளியிட்டுள்ளார். இதனால் ராம் - கவுதம் இணையும் படத்தை இவர் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.