உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வல்லான் : ஆண்ட்ரியா பாடிய லிரிக் வீடியோ வெளியீடு

வல்லான் : ஆண்ட்ரியா பாடிய லிரிக் வீடியோ வெளியீடு

சிபிராஜ் நடித்த கட்டப்பாவை காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் தற்போது இயக்கி வரும் படம் வல்லான். இப்படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்கிறார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ள ஜில்லு ஜக்கம்மா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !