தெலுங்கில் தாமதமாக வெளியான 'வெந்து தணிந்தது காடு'
ADDED : 1114 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்து நேற்று முன்தினம் செப்டம்பர் 15ம் தேதி தமிழில் வெளிவந்த படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் தெலுங்கில் 'லைப் ஆப் முத்து' என்ற பெயரில் டப்பிங் ஆகி இரண்டு நாள் தாமதமாக இன்று தான் வெளியானது. ஆனால், இன்றும் காலை காட்சியில் படம் வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மதியக் காட்சியில் இருந்துதான் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
ஐதரபாத்தில் 'வெந்து தணிந்தது காடு' தமிழ் பதிப்பு சில தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தெலுங்கை விடவும் தமிழ்ப் படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆன்லைன் டிக்கெட் தளங்களில் பார்க்க முடிகிறது.
இதனிடையே, தமிழகத்தில் இப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.