கடற்கரை தான் எனது சிகிச்சையாளர் - கவர்ச்சியில் அமலாபால்
ADDED : 1115 days ago
தமிழில் அமலாபால் நடிப்பில் கடைசியாக கடாவர் என்ற படம் வெளியானது. அதையடுத்து மலையாளத்தில் மம்முட்டியுடன் கிறிஸ்டோபர், பிருத்விராஜுடன் ஆடு ஜீவிதம் மற்றும் டீச்சர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ஒரு வெப்சீரியலிலும் நடிக்கிறார் அமலா பால். தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் வித்தியாசமான உடையில் அங்கு எடுத்துக் கொண்ட தனது கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு கடற்கரை தான் என்னுடைய சிகிச்சையாளர் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த போட்டோக்கள் வைரலாகின. ரசிகர்கள் அமலாபாலின் செக்ஸி லுக்கிற்கு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.