மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1084 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1084 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவை அதிகம் ரசித்து பார்க்கும் மலையாள இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தில் சிம்புவின் நடிப்பையும் கவுதம் மேனன் டைரக்சனையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இரண்டு நாட்களாகவே வெந்து தணிந்தது காடு படஹ்தின் காட்சிகளை பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்களும் இந்த படம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ தெரியாது.. ஆனால் இந்த படத்தில் நடிப்பு, மேக்கிங், பரிசோதனை முயற்சியிலான பல காட்சிகள் மற்றும் எழுத்தில் காட்டப்பட்டுள்ள புத்திசாலித்தனம் என எல்லாமாகச் சேர்ந்து இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. காக்க காக்க படத்திலிருந்து கவுதம் மேனன் இயக்கத்தில் இதுதான் என்னுடைய ஃபேவரைட் படம் என்று சொல்வேன். அதேபோல சிலம்பரசனின் திரையுலக பயணத்திலேயே இதுதான் மிக முக்கியமான படம் என்றும் கூறுவேன்” என்று புகழ்ந்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் நீரஜ் மாதவ்வுக்கும் அவர் படத்தில் பாடிய பிரபல ராப் பாட்டுக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு வினீத் சீனிவாசன் கதையில் உருவான ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகன் நிவின்பாலி சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் கேரளாவிலிருந்து கிளம்பி, இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்வதற்காக சென்னைக்கு வருவதாக காட்சிகளைச் சித்தரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1084 days ago
1084 days ago