அஜித் 61 பட தலைப்பு துணிவே துணையா...
ADDED : 1133 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61வது படத்திற்கு தற்காலிகமாக ஏகே 61 என பெயரிட்டுள்ளனர். அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தபடியாக பேங்காங் செல்ல உள்ளனர். இதோடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் என தெரிகிறது.
இந்த படத்திற்கு வல்லமை என்று தலைப்பு வைக்க பட குழு முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதை படக் குழு உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது துணிவே துணை என்ற தலைப்பு வைக்க பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அக்., 2ல் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதே தலைப்பில் ஜெய்சங்கர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.