மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1080 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1080 days ago
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பெரிய விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். அமெரிக்கத் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் வெளிநாடுகளில் வெளியாகும் படங்களுக்கும் சில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பல நாடுகள் அவர்கள் நாடுகளில் வெளியாகும் படங்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' என்ற படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளார்.
போட்டியில் இருந்த, 13 படங்களில் தமிழிலிருந்து 'இரவின் நிழல்', தெலுங்கிலிருந்து 'ஆர்ஆர்ஆர், ஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் குஜராத்திப் படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டது. 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்படாதது குறித்து தெலுங்கு ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'சிறந்த வெளிநாட்டுப் படம்' விருது வாங்க அந்தந்த நாடுகள் தேர்வு செய்து அனுப்பும் படங்களைத்தான் ஆஸ்கர் விருது குழு பரிசீலிக்கும். இருப்பினும், 'ஆர்ஆர்ஆர்' படம் நேரடியாக ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.
1080 days ago
1080 days ago