மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1080 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1080 days ago
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த படம் 'லைகர்'. பான் இந்தியா படமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்கிலிருந்து மற்றுமொரு ஹீரோ பான் இந்தியா அந்தஸ்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தோல்வி விஜய் தேவரகொண்டாவின் இமேஜையும் பெரிதும் பாதித்தது.
விமர்சகர்கள், ரசிகர்கள் பலரும் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தான் படத்தோல்விக்குக் காரணம் என விமர்சித்திருந்தார்கள். கதையே இல்லாமல் எப்படி இப்படி ஒரு படத்தை இவ்வளவு செலவு செய்து எடுக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பினார்கள். ஹிந்தியில் வெறும் 20 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்து கடந்த வாரத்துடன் எஞ்சியிருந்த தியேட்டர் ஓட்டத்தையும் நிறைவு செய்தது.
இந்நிலையில் இப்படம் நாளை செப்டம்பர் 22ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் நாளை வெளியாகும் என்றும் ஹிந்தியில் பிறகு வெளியாகும் என்றும் தெரிகிறது. தியேட்டர்களில் கிடைக்காத வரவேற்பு ஓடிடியிலாவது கிடைக்குமா ?.
1080 days ago
1080 days ago