சஞ்சய் கேரக்டருக்கு விஷக் நாயரை தேர்வு செய்தது எப்படி? - கங்கனா விளக்கம்
ADDED : 1111 days ago
கங்கனா இயக்கி வரும் எமெர்ஜென்சி படத்தில் அவர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் காந்தியாக மலையாள நடிகர் விஷக் நாயர் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது : இந்திராவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சஞ்சய். அப்பாவித்தனமான முகமும் சாதுர்யமான செயல்பாடுகளையும் கொண்டவர். சஞ்சய் அவரது தாயின் நீட்சி. சஞ்சய் கேரக்டரில் நடிக்க 6 மாதங்களுக்கும் மேலாக ஒரு முகத்தைத் தேடினேன், தற்போது பொருத்தமானவரை கண்டுபிடித்து விட்டேன். ஒரு புதிய முகத்தை மிகப் பெரிய அளவிலான படத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது முதல் இந்தி படம், சஞ்சயின் கதாபாத்திரத்திற்கு அவர் சிறந்த நீதியை வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்கிறார் கங்கனா ரணவத்.