புஷ்பா 2வில் மலைகா அரோரா
ADDED : 1112 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல்பாகத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு சமந்தா ஆடினார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. ஹிந்தியிலும் சமந்தாவை இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோன்று ஒரு பாட்டை எடுக்க உள்ளனர். இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டார். மாறாக திஷா பதானி ஆடுவார் என கூறப்பட்டது. தற்போது நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க பேசி வருகின்றனர்.