இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்
ADDED : 1110 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்பட நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இன்றைய தினம் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இயக்குனர் ஷங்கர் கமலிடத்தில் ஒரு காட்சி குறித்து விளக்குவது இடம் பெற்றுள்ளது. அதோடு இன்று முதல் இந்தியன்-2 படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கமல்.