கமலின் பின்னணி குரலில் பொன்னியின் செல்வன் புதிய புரமோ வெளியீடு
ADDED : 1111 days ago
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது அப்படத்தின் புரமோஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இப்படம் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது சோழ இளவரசனால் பாண்டிய மன்னன் கொல்லப்பட்டதை அடுத்து சோழ இளவரசனை பழி தீர்ப்பதற்கு அந்த நாட்டுக்குள் பாண்டிய மன்னனின் வீரர்கள் செல்லும் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த காட்சியில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கிஷோர், ரியாஸ்கான், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த வீடியோவின் பின்னணியில் நடிகர் கமல்ஹாசனின் கம்பீர குரல் ஒலிக்கிறது.