பிரின்ஸ் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது
ADDED : 1193 days ago
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்திருக்கும் படம் பிரின்ஸ். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தமன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று நலையில் தற்போது இப்படத்தின் ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதுகுறித்த போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.