ஹீரோயினாக ஜெயிப்பாரா 'பீஸ்ட்' அபர்ணா
ADDED : 1157 days ago
ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் படம் டாடா. அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். கவின், அபர்ணா, கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ப்ரதீப் ஆண்டனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மனோகரம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான அபர்ணா, பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தமிழில் ஹீரோயினாக ஜெயிப்பாரா என்பது இந்த படம் வெளிவந்த பிறகு தெரியும்.