அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் பொற்கோவிலில் சாமி தரிசனம்
ADDED : 1184 days ago
புஷ்பா படத்திற்கு பிறகு பான் இண்டியா நடிகர் ஆகிவிட்டார் அல்லு அர்ஜூன். அடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் வருகிற 3ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐதராபாத்தில் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள அல்லு ஸ்டூடியோவின் திறப்பு விழா நடக்க இருக்கிறது. இந்த ஸ்டூடியோவில்தான் புஷ்பா படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.
இதை தொடர்ந்து அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டி , குழந்தைகள் அயான் மற்றும் அர்ஹாவுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீ்க்கியர்களின் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவர் பொதுமக்களுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டார். பின்னர் அங்கிருந்த அன்னதான கூடத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி சென்றார். இந்த படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாக பரவியது.