உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 9ல் பிரின்ஸ் இசை வெளியீடு

அக்டோபர் 9ல் பிரின்ஸ் இசை வெளியீடு

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். அவருடன் மரியா சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் இப்படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி பிரின்ஸ் படத்தின் இசை விழா பிரமாண்டமாக நடைபெறுவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !