பாவாடை தாவணியில் அசத்தும் ரம்யா பாண்டியன்
ADDED : 1164 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகிவிட்ட ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு உள்ளாடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது பாவாடை தாவணியில் மங்களகரமாக ஒரு போட்டோ சூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு உள்ளாடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்களை விட இந்த பாவாடை தாவணி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதோடு இந்த உடையில் தான் ரம்யா பாண்டியன் மிக அழகாக இருக்கிறார் என்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.