தமிழில் கூடுதல் கவனம் செலுத்தும் கிர்த்தி ஷெட்டி
ADDED : 1118 days ago
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் கிர்த்தி செட்டி. அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் , தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்தார். தற்போது கிர்த்தி ஷெட்டியின் கவனம் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதன் பிறகு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சில தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.