சீன ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியான ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர்!
ADDED : 1199 days ago
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வெளியான படம் ஆர் ஆர் ஆர் . உலகளாவிய பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் செப்டம்பர் 30ம் தேதி மாலை 7 மணிக்கு சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய டிஎல்சி ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படம் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த திரையிடலில் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டதோடு அங்கு நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் உரையாடி இருக்கிறார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி -2, ஈகா, மகதீரா, மரியாத ராமண்ணா போன்ற படங்களும் அடுத்தடுத்து சீனாவில் உள்ள இந்த ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளன.