மகப்பேறு ஆடைகளை அறிமுகப்படுத்திய ஆலியா பட்!
ADDED : 1198 days ago
பாலிவுட் நடிகை ஆலியா பட் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவரும், அவரது கணவர் ரன்பீர் கபூரும் தங்களது முதல் படமான பிரம்மாஸ்திரா வெளியான பிறகு இந்த தகவலை வெளியிட்டனர். மேலும் ஆலியா பட் தற்போது ஆடை வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார். இந்த ஆடை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு ஆடையாகும். இது குறித்த தகவலை ஆலியாபட் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டதை அடுத்து பாலிவுட்டில் கர்ப்பமாக இருக்கும் பிபாஷா பாசு உள்ளிட்ட சில நடிகைகளும் ஆலியா பட்டை தொடர்பு கொண்டு மகப்பேறு ஆடைகளை அவரிடத்தில் வாங்கப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.