மீண்டும் குஷி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சமந்தா
ADDED : 1106 days ago
சமந்தா தெலுங்கில் சாகுந்தலம், யசோதா என்ற இரண்டு படங்களில் கதையின் நாயகியாக நடித்து முடித்து இருக்கிறார். இதையடுத்து விஜய்தேவர கொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. சிவா நிர்வாண இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த போது திடீரென்று அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டதற்காக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாக தகவல் வந்தது. இதனால் குஷி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அடுத்த வாரம் ஐதராபாத் திரும்புகிறார் சமந்தா. அதையடுத்து அவர் மீண்டும் குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போகிறார். இந்த படத்தில் நடித்து வரும்போது சாகுந்தலம், யசோதா போன்ற படங்களின் புரோமோஷன் பணிகளில் ஈடுபடும் சமந்தா, ஹிந்தி வெப் சீரிஸிலும் நடிக்கப் போகிறார்.