லண்டனில் ராம் படப்பிடிப்பில் சமைத்து அசத்திய மோகன்லால்
ADDED : 1202 days ago
த்ரிஷ்யம் இரண்டு பாகங்கள் மற்றும் டுவல்த் மென் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மோகன்லால் தற்போது நான்காவது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் தாங்கள் தங்கி இருந்த இடத்தில் சக நடிகர்களான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் ஆகியோருக்கு மோகன்லால் மாட்டு இறைச்சி கறி சமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி உள்ளது.